பிரான்சில் 25ஆவது நாட்களாகத்தொடரும் மக்கள்போராட்டமும் 23 நாட்களாகத்தொடரும் உண்ணாநிலைப் போராட்டமும்.

france300409_3கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள சுதந்திர சதுக்க்கம்(றீபப்ளிக்) எனும் பகுதில் மக்கள் போராட்டம் உணர்வோடு நடைபெற்றுக்கொண்டிருக்க, ராஜ்குமார்,நவவீதன் ஆகியோர் உண்ணா நிலைப்போராட்டத்தை தொடற்ர்சியாக மேற்கொண்டுள்ளனர்.

பசிகிடக்கும் இளையோரை தொடர்ச்சியாக பெருமளவிலான மக்கள் பார்வையிட்டுவருகிறார்கள்.

உடனடிப்போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கக்கோரியும் இப்போரட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இதேவேளை மே 1 தொழிலாளர் நாளில் நாளை வெள்ளிக்கிழமை தமிழினம் மேலும் எழுர்ச்சி கொள்ளும் அடங்காப்பற்று பேரணி மதியம் 12 மணிக்கு DENFERT ROCHEREAU ல் ஆரம்பமாகி BASTILLE எனும் இடத்தில் நிறைவடையவிருக்கிறது.

எனவே அனைத்து மக்களும் பேரணியில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக்கொள்கிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.