புலிகளின் மரபு ரீதியான இராணுவ பலம் குன்றினாலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாது – ஹிமாலயன் டைம்ஸ்

himalayan-timesதமிழீழ விடுதலைப் புலிகளின் மரபு ரீதியான இராணுவ பலம் குன்றியிருந்த போதிலும் போராட்ட வல்லமையை குறைத்து மதிப்பிட முடியாதென தி ஹிமாலயன் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளை வலையமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இதனால் இன்னமும் மிகவும் வலுவாலன நிலையில் காணப்படுவதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்திய மற்றும் இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படக் கூடுமென எதிர்வு கூறியுள்ளது.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற மதிப்பீடு நடைமுறைச் சாத்தியப்படாடற்றதென தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மரபு ரீதியான ஆயுத போராட்டத்தில் புலிகள் தோல்வியைத் தழுவினாலும் வேறும் வழிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.