நள்ளிரவு முதல் சிறீலங்கா முப்படையினரும் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது அகோர தாக்குதல்கள் நடத்துகின்றனர்

nerudal-tamilசிறீலங்காப் படையினரின் முப்படைகளும் ”மக்கள் பாதுகாப்பு வலயம்” மீது மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக சற்று முன் வன்னியிலிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று நள்ளிரவு முதல் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தரைப்படையினர் எறிகணைகளை ஏவிவருகின்றனர். கடற்படையினர் கரையோரப் பிரதேசங்களை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதல்களை நடத்துகின்றனர். வான் படையினர் மக்கள் பாதுகாப்பு வலயத்தில் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர்.கடந்த ஒரு மணித்தியாலங்களாக (தாயக நேரம் நள்ளிரவு 12 மணி முதல்) சிறீலங்காப் படையினர் மிக மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.