டென்மார்க்கில் தொடரும் பேரணிகள்

pict0076டென்மார்க்கில் தொடர்ந்து நடைபெறும் கவனயீப்புப் போராட்டமானது தொடர்ந்தும் நூற்றுக்கணக்கான தமிழ் மக்களுடன் 29.04.09 அன்று கேர்ணிங், ஓகூஸ், கொப்பன்கேகன்; போன்ற நகரங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தது. கணிசமான மக்கள் தொகையினர் நாடுபூராகவும் இருந்து வந்து தங்கள் பங்களிப்புக்களை செய்தவண்ணம் உள்ளனர். அமைதிப் போராட்டத்தின் மூலம் டென்மார்மக்களைக் கவர்ந்த இப்போராட்டங்கள் முழுமையான இலக்கை அடையும்வரை தொடர்ந்து நடாத்தப்படும் எனவும், அனைத்துத் தமிழ் மக்களும் இதில் கலந்துகொண்டு தமிழுக்காகவும் தமிழீழத்திற்காகவும் தங்கள் பங்களிப்புக்களைச் செய்ய முன்வரவேண்டும் என்றும் அமைப்பாளர்கள் கருதுகின்றனர்.

இதனைத்தவிர முன்னர் அறிவித்ததன்படி மே மாதம் முதலாம்திகதி பாரியஅளவிலான ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை தலைநகர் அமைதித்திடலில் நடாத்தத் திட்டமிட்டிருப்பதால் நாடுதழுவிய அனைத்து மக்களும் இதில் கலந்து சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பிற்கெதிராகப் போர்க்கொடி தூக்க வேண்டும் என்றும் அனைத்து ஆர்வலர்களும் கருதுகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.