டென்மார் வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிக்கை! உடனடி மனித அவலத்தை நிறுத்தவும், போர்நிறுத்தம் ஏற்படவும் ஐ.நா. ஊடாகப் புதிய அழுத்தம்

udenrigsministerietடென்மார்க் வெளிநாட்டு அமைச்சகத்தில் 30.04.09 அன்று அதன் தகவல் மையம் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டென்மார்க் அரசு தமிழ் மக்கள் மீதான நிலைப்பாட்டை விளக்கிங்கொள்ளும் வகையில் பொது நிறுவனங்களுக்கும் பத்திரிகைச் செய்தியாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது தனது மனிதாபிமான நிலையில் இருந்து தவறிவிட்டதென்றும் அதனைச் சீர்ப்படுத்தும் முயற்சியில் உலகநாடுகளின் கவனம் உடனடியாகத்திரும்ப வேண்டும் என்றும் அங்கு நடைபெற்றுவரும் மனிதாபிமானமற்ற மனித அவலங்களைத் தாங்கள் பாரதூரமான விளைவுகளாகப் பார்க்கிறார்கள் என்றும் இதற்கான அவசர நடவடிக்கையில் தாங்கள் சிறிலங்கா அரசுடன் பேசுவதற்கு முனைப்புக் கொண்டிருப்பதாகவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பிரதேசம் என்று சிறிலங்கா அரசாங்கத்தால் குறிக்கப்படும் வன்னிப் பகுதிக்குள் 50 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் வரையிலான தமிழ்மக்கள் இராணுவ அழிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருப்பதையும் அம்மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான நிலைப்பாடு மனிதாபிமான அடிப்படையில் தங்களுக்கும் இருப்பதாக டென்மார்க் அரசு அறிவித்துள்ளது.

கடந்த 20ம் திகதிக்குப்பின் பாதுகாப்புப் பிரதேசத்திலிருந்து வந்த ஒருலட்சத்திப்பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழ்மக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மனநிலையில் பீதியடைந்திருப்பதாகவும், ஒருலட்சத்து 60 ஆயிரம் தமிழ் மக்கள் உள்ளாட்டிலேயே அடிப்படை வசதிகள் எதுவுமின்றி சிறிலங்கா அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதையும் தாங்கள் வன்மையாகக் கண்டிப்பதோடு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற தொனிப்புடனும் அறிக்கை வெளிவந்துள்ளது.

இது இவ்வாறிருக்க டென்மார்க் வெளிநாட்டு அமைச்சர் திரு.பியஸ்டி முல்லர் அவர்கள் தமிழ்மக்களின் கவனயீர்ப்புப் போராட்டத்தின் காரணமாக 3வது தடவையாக சிறிலங்கா வெளிநாட்டு அசைச்சர் திரு.கோகித பொகலாகம அவர்களேர்டு தொடர்பு கொண்டுள்ளனர். இதன் நிமித்தம் டென்மார்க் மனித உரிமைகள் அமைப்பின் பிரதான நிர்வாகி திரு.ஆர்னோல்ட் ஸ்கிப்ஸ்ரெட் அவர்களை கூடியவிரைவில சிறிலங்காவிற்கு அனுப்பி வைப்பதாகவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்படும் போர்க்கால வாக்குறுதிகள் அவர்களாலேயே மதிக்கப்படுவதில்லை என்பதனைத் தாங்கள் பலமுறை பலகோணங்களில் உணர்ந்துள்ளதையும் வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். டென்மார்க் அரசாங்கமானது பாரிய அளவிலான மனிதப் பேரவலத்திற்குள் சிக்கித் தவிக்கும் தமிழ்மக்களைக் காப்பாற்றும் உறுதியுடன் தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் சபை ஊடாகவும், ஐரோப்பிய யூனியன் ஊடாகவும் தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களில் போர் நிறுத்தத்தை நடைமுறைப் படுத்தக்கோரியும், சூட்டுச் சம்பவங்களை பொதுமக்கள் வாழும் பிரதுரசங்களிலிருந்து உடனடியாகத் தவிர்க்கவேண்டும் என்றும் தமிழ்மக்கள் மீதான இந்த மனித அவலத்தைத் தடுப்பதுடன் தமிழர்பிரச்சனைக்கு சிறிலங்கா அரசானது நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை உடனடியாக மேற்கொள்ள சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து செயற்படுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா அரசிற்கு அழுத்தமகொடுக்க உத்தேசித்துள்ளது.

தமிழ்மக்கள் அகதிகளாக வாழும் பிரதேசங்களுக்கு சர்வதேசக் கண்காணிப்பாளர்களையும், உலகப் பொது உதவி நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உலகநாடுகள் அனைத்தும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து ஆவனசெய்ய டென்மார்க் அரசானது பின்நிற்பதில்லை என உறுதிகூறியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.