வன்னிமக்களின் பெயரால் கொள்ளை! கருணாகுழுவினரின் அட்டகாசம்!

goods_colectiotmvpவன்னியிலிருந்த இடம்பெயர்ந்த மக்களுக்காக பொருட்களை சேகரித்து தமது சொந்த தேவைகளுக்கு கருணா குழுவினர் பயன்படுத்திவருவதாக கல்முனைப் பிரதேச மக்கள் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக் களுக்கு கல்முனைப்பிரதேச மக்களிடம் வீடுவீடாகச் சென்று பொருட்களை சேகரிப்பதற்காக கல்முனையிலுள்ள அனைத்து கழக உறுப்பினர்களையும் இன்று (30-04-2009) காலை தமது அலுவலகத்துக்கு வரும்படி கருணாகுழுவினர் அழைப்பு விடுத்திருந்தனர். கருணா குழுவினரின் உள்நோக்கத்தைப் புரிந்த கொண்ட கழகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவரும் சமுகமளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கருணாவின் நம்பிக்கைக்குரிய இனியபாரதியின் வலதுகையும் கல்முனையிலுள்ள அனைத்து கருணாகுழு முகாம்களுக்கும் பொறுப்பாளருமான வெள்ளையன் என்பவர் அனைத்துக் கழக உறுப்பினர்களுக்கும் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்ததோடு அனைவரையும் மாலை தமது அலுவலகத்துக்கு கட்டாயம் சமூகமளிக்கும்படி கேட்டுள்ளார். இதனால் பயந்து போன உறுப்பினர்கள் மாலை கருணா குழுவி னரின் கல்முனை அலுவலகத்துக்குச் சென்றபொழுது. கொண்டன்களாலும், பைப்புகளாலும் கருணா குழுவினரால் இவர்கள் மிகமோசமாகத் தாக்கப் பட்டுள்ளனர். சுமார் 40 பேரளவில் இவ்வாறு தாக்கப்பட்டதாகவும் சிலர் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே கல்முனைப்பிரதேச மக்களிடமும், வர்த்தகர்களிடம் சுமார் 60 இலட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் இதுவரையில் சேர்க்கப்பட்டுள்ள தாகவும். வன்னி மக்களைக் காட்டி இலட்சக்கணக்கில் இவர்கள் பெருமளவில் வர்த்தகர்களிடம் பணம்பெற்றுள்ளதாகவும் கருணாகுழு தரப்பு செய்தியொன்று தெரிவிக்கின்றது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட பணத்தின் ஒருபகுதியில் இன்றுமாலையே கல்முனை பாண்டிருப்பு எல்லைவீதியிலுள்ள கருணாகுழு முகாமுக்கு பின்னால் உள்ள ஆர்.டி.ஏ நிறுவனத்தில் உத்தியோகஸ்தராக கடமையாற்றும் நித்தியானந்தன் என்பவருக்குச் சொந்தமான வளவில் வலைப்பந்தாட்ட மைதானமொன்றை அமைத்துள்ளனர். ஏற்கனவே இவருடைய வீட்டை பலாத்காரமாக அபகரித்த கருணாகுழுவினர் இன்று இவருக்குச் சொந்தமான வளவையும் அபகரித் துள்ளனர்.

இதை கருணாகுழு உறுப்பினர் ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார். மக்களிடம் சேகரித்த அரிசி, பருப்பு, சீனி போன்ற பொருள்களைக்கொண்ட மூட்டைகள் கல்முனையிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வாகனமொன்றில் ஏற்றப்பட்டு கருணாகுழுவினரின் முகாம்களுக்கு பகிர்ந் தளிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கருணா குழுவினரின் முகாம்களுக்கு பல்வேறு தேவை நிமித்தம் சென்றுவரும் மக்களும் இவ்வாறு சேகரித்த பொருட்களை தமது சொந்த தேவைக்கு கருணாகுழுவினர் பயன்படுத்தி வருவதை நேரில் கண்டு எமக்குத் தெரிவித்துள்ளனர்.

மீனகன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.