சிறீலங்கா இராணுவ இணையத்தளத்திற்குள் ஊடுருவி முடக்கம் – புலிகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு

sri-lanka-armyஇலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளம் இன்று காலை இனம் தெரியாதவர்களால் கைப்பற்றப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. இது விடுதலைப்புலிகளின் நாசகார செயல்களின் ஒன்றென அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அரச இராணுவ யுத்த வெற்றிச்செய்திகள் புகைப்படங்களுடன் இவ் இணையத்தளத்தில் உடனடியாக பதிவேற்றப்படுவதனால் அண்மைக் காலங்களில் அதிகளவான வாசகர்களை கொண்டதளமாக இவ் இணையம் விளங்கியது.

ஆனாலும் பல பழைய புகைப்படங்களை இணைத்தும் பல சுத்துமாத்து வேலைகளை மேற்கொண்டும். சிங்கள மக்களை முட்டாள்களாக்கி பலவாறான பொய்ச் செய்திகளையும் வெளியிட்டு இறந்த தமது சகாக்களின் உடல்களை காட்டி புலிகளின் உடல்களென பிரச்சாரம் செய்தும், தமது படை உபகரணங்கள் சிலவற்றை வெளியிட்டு தம்மால் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் என்றும் பல பிரச்சாரங்களை இவ் இணையத்தளம் மேற்கொண்டு வந்தமையையும் ஆதாரங்களுடன் நெருடல் இணையத்தளம் ஊடாக சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

எனினும் இனிவரும் காலங்களில் இணையத்தள வலையமைப்புகளுக்குள் ஊடுருவி பல சைபர் தாக்குதல்களை விடுதலைப்புலிகள் மேற்கொள்ளவிருப்பதாகவும், பல செய்மதிகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட்டு வருவதாகவும் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இதே போன்று சில தமிழ் ஊடகங்களும் சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளன. அதற்கான பதிலடிதான் இதுவும் என நம்பப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.