அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபா மானியமாக வழங்கப்படும் – ஜெயலலிதா அறிவிப்பு

jayalithaஇடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்கு 10 ஆயிரம் கோடி ரூபா மானியம் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க. பொது செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார்.

மயிலாடுதுறையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ்.மணியனை ஆதரித்து கீழ்வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் தமிழகம் புதிய வரலாறு படைக்கும். தமிழகத்துக்கு முக்கியத்துவம் கிடைக்கும். இந்தியாவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகும். இந்தியா அமைதிப்பூங்காவாக மாறி பொருளாதார வளர்ச்சி பெறும். தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்கும்.

பணவீக்கம் தடுக்கப்படுவதுடன், மணல் கொள்ளையும் தடுக்கப்படும். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட முழு ஆதரவையும் வழங்குவோம். அதுமட்டுமன்றி தனி ஈழம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.