நெதர்லாந்தில் நடைபெற்ற மேதினஊர்வலம்; தமிழ்இளையோர்கள் அதிகமாக பங்கேற்பு

dsc04695நெதர்லாந்தில் தொழிலாளர்தினமான மே 1 இல் பல்லினமக்களுடன் தமிழ்மக்களும் இணைந்து மேநாளை உலகப்புகழ்பெற்ற துறைமுகம் உள்ள “ரொத்தர்டாம்” நகரில் நேற்று (01.05.2009) வெள்ளி நடாத்தியிருந்தனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்லினமக்களும், நூற்றுக்கணக்கான தமிழ்மக்களும் கலந்துகொண்ட இவ்வூர்வலத்தில் தமிழ்இளையோர்கள் அதிகமாகக் கலந்துகொண்டனர்.

சிங்கள அரசே! உடனடியாகப் போரை நிறுத்து!

தமிழினப்படுகொலைகளை உடன் நிறுத்து!

எங்கள் முடிவு! தமிழீழம்!

ஏங்கள் தலைவர் பிரபாகரன்!

டவுண் டவண் சோனியா!

டவுண் டவுண் காங்கிரஸ்!

தமிழகமக்களே காங்கிரசைத் தோற்கடியுங்கள்!

இரசாயன ஆயுதங்களைப்பாவிக்காதே!

போன்ற கோரிக்கைகளை பதாகைகளாகவும் கோசங்களாகவும் முழங்கினர்.

மாலை 7 மணிக்கு ஆரம்பமான இவ்வூர்வலம் இரவு 9.30 மணிக்கு நிறைவுபெற்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.