டென்மார்க் தமிழ் மக்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டங்கள்

p4300456தொடர்ந்து டென்மார்க்கின் முக்கிய தலைநகரங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு முன்னிலைப் படுத்தல் போராட்டமானது அந்தந்த நகரங்களில் வசிக்கும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உரிமைக்காகப் போராடும் தமிழ் மக்கள் ஈழத்தில் அமைதியும், சமாதானமும், போர்நிறுத்தமும், நிரந்தர அரசியல் தீர்வொன்றையும் தமிழ் மக்களுக்குக் கிடைப்பதற்கான நடவடிக்கைகளில் முழுதாக டென்மார்க் அரசை சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும் என்பதை முன்வைத்தே போராட்டங்களில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.

30.04.09 அன்று மேற்குறிப்பிட்ட கருத்துக்களை மையகப்படுத்தி றணாஸ், கோசன்ஸ் ஓகூஸ் போன்ற நகரங்களில் நடாத்தியுள்ளனர். பெருந்தொகையான டெனிஸ் மக்கள் தமிழர் பிரச்சனைகளை விளங்கிக் கொள்வதற்காகவே இப்போராட்டங்கள்  முன்னிலைப்படுத்தப்படுகின்றன என்ற உண்மையை டென்மார்க் அரசினூடாக மக்களுக்குப் புலப்படுத்துவதையே இப் போராட்ட நிகழ்வுகள் பிரதிபலிக்கின்றன.

இது மட்டுமல்லாமல் இன்று டென்மார்க்கின் 6 பிரதான நகரங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்டட்டுள்ளன. ஓகூஸ், கொஸ்றப்போ, சிவன்போ, கோப்பூறோ, ஸ்கான், கொப்பன்கேகன் போன்ற நகரங்களில் தமிழின அழிவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இப்போராட்டங்கள் ஈழத்தமிழர்களின் இன்னல்களை வலியுறுத்தும்  பதாதைகளைத் தாங்கிய வண்ணம் நடைபெறுகின்றது.

தோடர்ந்து மேதினமாகிய இன்று தலைநகர் கொப்பன்கேகன் பொது அமைதிவலையத்தில் 3 லட்சம் டெனிஸ் மக்கள் கூடிய இடத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.