இலங்கை ராணுவத்திடம் தஞ்சமடைந்த 3000 பேரைக் காணவில்லை: ரணில்

ranilஇலங்கை ராணுவத்திடம் தஞ்சமடைந்த 3000 பேரைக் காணவில்லை என்று முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்தபோது பல முக்கிய விபரங்களை தெரிந்துகொண்டேன்.

இலங்கை ராணுவத்திடம் தஞ்சமைடைந்த இளைஞர்கள், பெண்கள் உட்பட 3000 பேரைக் காணவில்லை. அதுபற்றிய தகவல்களை இலங்கை அரசு வெளியிடவில்லை.

இப்படிப்பட்ட தகவல்களை நான் வெளிநாட்டு அமைச்சர்கள் மூலம் தான் தெரிந்துகொள்ளும் நிலையில் உள்ளேன். காணாமல் போனவர்களை பற்றிய உண்மைகளை அரசு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு ரணில் தெரிவித்தார்.

ஆடு நனையுது என்ற ஓநாய் அழுதுச்சாம்!

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.