இத்தாலி மேற்பிராந்திய தமிழ் அமைப்புக்கள் இணைந்து நடாத்திய மேதினப் பேரணி

s800173401-05-2009 வெள்ளிக்கிழமை அன்று இத்தாலி தொழிற்சங்கங்களுடன் இணைந்து இத்தாலி மேற்பிராந்திய தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மாபெரும் மேதினப் பேரணி ஒன்றை ரொறினோ மாநகரில் நடாத்தியது. 

இப்பேரணியில் இத்தாலியின் பல பாகங்களிலிருந்தும் வந்த 300ற்கு மேற்பட்ட எம் தமிழ் உறவுகள் கலந்துகொண்டு தாயகத்தில் எம் மக்கள் படும் அவலத்தையும் தாயக இன்றைய நிலையையும் இத்தாலிய மக்களின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். பேரணி நடைபெற்றபோது எமது மக்கள் அணிவகுப்பை இத்தாலிய மக்கள் வரவேற்று உற்சாகமளித்தனர். அப்போது 2000 ற்கு மேற்பட்ட இத்தாலிய மொழியிலுள்ள துண்டுப்பிரசுரங்கள் அம்மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.

அத்துடன் இத்தாலியின் ஊடகங்களும் எமது உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.