30 Minuten – எம் அன்பான மக்களே எம்தாயக விடுதலைக்கு எம்மால் இயன்றதை செய்வோம் அதை தொடர்ந்து செய்வோம்

30min_01எம் அன்பான தாயக மக்களே வணக்கம்..
நாம் ஏற்கனவே உங்களிடம் கொண்டு வந்த செய்தி
நாம் வசிக்கும் நாடுகளில் இருந்து வரும் செய்தி ஊடகங்களில் எம்மை பற்றி வரும் தவறான செய்திகளுக்கு உடன் மறுப்பு தெரிவித்து எமது ஆட்சேபனைகளை அவர்களுக்கு தெரிவிக்கவும் அத்துடன் எம்மை பற்றி உண்மையான செய்திகளை வெளியிடும் ஊடகங்களை ஊக்கப்படுத்தும் முகமாக எமது நன்றிகளையும் சொல்வதோடு எமது சமகால நிலைமைகளை அவற்றின் மூலம் பல்லின மக்களிடம் கொண்டுசெல்லும் பணியை மென்மேலும் வளர்த்துக்கொள்ளலாம்.நாம் எமது கருத்துக்களை தெரிவிக்கும் போது அந்த கருத்தானது feedback ல் பதியப்படும் போது அந்த செய்தியை படிக்க வரும் அனைவரும் அவற்றை படித்து எமது சமகால நிலையினை நன்றாக அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் அத்துடன் எமக்கும் அது ஒரு பாரிய பிரச்சாரமாகவும் இருக்கும்.

அந்த வகையில் நேற்றைய தினம் சுவிஷில் Deutsch மொழியில் ஒரு கன்னி முயற்சியாக எமது தாயக இன்றைய நிலை தாங்கி ஒரு பத்திரிக்கை.2 இலட்சம் பிரதிகள் குறுகிய நேரத்தில் Swiss ல் Deutsch மொழி பேசப்படும் பகுதி எங்கும் விரைவாகவும் மிகவும் நேர்த்தியாகவும் விநியோகிக்கப்பட்டது.நாம் எதிபார்த்ததை போல மிகவும் அதிகமாக சுவிஷ் மக்களிடம் நன்றாக சென்றடைந்துள்ளது.

மக்களே இத்தோடு எம் கடமை முடிந்து விடக்கூடாது…..இனி உங்களின் பங்கும் மிகவும் முக்கியம் இதை படிக்கும் ஒவ்வொருத்தரும் இதை பற்றி நீங்கள் பழகும் பல்லின மக்களிடம் எடுத்து கூறுங்கள்.அத்துடன் உங்கள் கருத்துக்களையும் தவறாது தயவுசெய்து பதிந்து கொள்ளுங்கள். இதன் பலாபலன் நிச்சயமாக எமக்கு நிறைய சாதகமான பல விளைவுகளை தரும்.

எம் அன்பான மக்களே எம்தாயக விடுதலைக்கு எம்மால் இயன்றதை செய்வோம் அதை தொடர்ந்து செய்வோம். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு செயல்களும் பங்களிப்புத்தான்…எம் விடுதலைக்காக நாம் எம்மால் இயன்ற எதையும் செய்வோம்.செய்துகொண்டே இருப்போம் எமக்கு தமிழீழம் கிடைக்கும் வரை எமது தொடர் பங்களிப்பினை செய்வோம்.

http://www.30min.ch/

http://nerudal.com/images/2009/05/30min_01.jpg

சுவிஷில் இருந்து அட்சயா

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.