நாம் சத்ய சோதனையெனும் நெருப்பாற்றை மிக அவதானமாக கடக்க வேண்டியுள்ளோம்

எம் தாயக உறவுகளே நாம் சத்ய சோதனையெனும் நெருப்பாற்றை மிக அவதானமாக கடக்க வேண்டியுள்ளோம். கடந்த சில நாட்களாக நாம் செய்துவரும் தொடர்போராட்டங்கள் எமக்கு நிச்சயம் வெற்றியை தரும்.இதன் போது பல சம்பவங்களை நான் நேரிடையாக உள்வாங்கி கொண்டேன். நான் உள்வாங்கி கொண்டதை அப்படியே ஒப்படைக்கின்றேன்.

நடைபெற்றுவரும் தொடர்போராட்டங்களின் போது சிறியோர் முதல் முதியோர்வரை கலந்துகொண்ட அனைவரும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையான எழுச்சியுடனும் தத்தமது பங்களிப்பினை செய்துகொண்டிருந்தார்கள்.குறிப்பாக எமது இளையோர் காட்டிய எழுச்சியையும் உணர்வுகளையும் பார்த்தபோது மனதினுள் அசுர நம்பிக்கை எமது விடுதலை வெகுவிரைவில் என்று கூறினால் அது தப்பில்லை.இத்தொடர் போராட்டங்களில் பங்குகொண்டுள்ள அனைத்து எம் உறவுகளிற்கும் எம் சிரம்தாழ்ந்த நன்றிகள்.தொடரட்டும் உங்கள் சேவை…நாம் நிச்சயமாக வெகுவிரைவில் எமது இலக்கை அடைவோம் இது உறுதி.

இதில் உள்ள ஒரு கசப்பான விடயம் என்னவென்றால்… மன்னிக்கவும் எமது ஒருசில நண்பர்கள் அவர்களை அறியாமலேயே Srilanka அரசின் சித்து விளையாடல்களிற்கு ஏமாந்து தங்களையே இழந்து விடுகின்றார்கள்.நண்பர்களே சற்று தனிமையில் இருந்து ஆழமாக சிந்தித்து பாருங்கள்… நாம் இன்று எதற்காக வீதியில் இறங்கி இருக்கின்றோம்..எமது மக்களிற்காக எமது விடுதலைக்காக எமது சுய விடிவிற்காக எமது மக்கள் எனும் போது என் சகோதரனோ அல்லது எனது சொந்தங்களோ மட்டுமன்றி உங்களது சொந்தங்கள் உறவுகள் இப்படி இங்கு வாழும் அனைத்து எம் தாயக உறவுகளின் உறவுகள் உயிர்கள்.இவர்கள் எங்கள் உயிர் அல்லவா இவர்கள் எங்கள் சந்ததி அல்லவா இவர்கள் எமக்காக இதுவரை இழந்தவைகள் போதும் இனியும் அவர்கள் இழப்பதற்கு எதுவுமில்லை..அவர்களை காப்பாற்றுவது எமது வரலாற்று கடமையல்லவா அவர்களுக்காக குரல்கொடுப்பது எமது கட்டாய பணி அல்லவா..
எம் புலம்பெயர்வாழ் மக்கள் அந்த வரலாற்று கடமையைத்தானே செய்ய வீதிகளில் இறங்கி அறவழிகளில் போராடுகின்றனர். அதை நாம் கலந்துகொண்டு பலப்படுத்தவேண்டாமா அதவிட்டு அவற்றை மலினப்படுத்தும் விதமாக உங்களது செயல்கள் அமைந்து விடக்கூடாது. நீங்கள் கடந்தகாலங்களில் செய்த தவறுகளை மறந்து புதிய எழுச்சியுடன் எம்மோடு இணையுங்கள் உங்கள் தார்மீக பங்கினை எம்மோடு சேர்ந்து வலுப்படுத்துங்கள்.நாம் பழைய பகைகளை மறந்து ஒன்றுபட்டு நிற்போம்.நிச்சயமாக ஒருவர் கருத்தில் மற்றவர்க்கு கருத்து வேறுபாடுகள் இருக்கும் அவற்றையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு நாம் எல்லோரும் ஒன்றாக போராடுவோம்.. நாம் தானே எமக்காக போராடவேண்டும் அதைவிட்டு england பிரதமரோ அல்லது ஐநாசபை அதிகாரியோ எங்களுக்காக போராடமாட்டார்கள்… மன்னிக்கவும் அவர்களையும் போரட வைக்கலாம் அதற்கு நாம் தான் ஓர்மத்துடனும் அற்பனிப்புடனும் போராடவேண்டும். கடந்த சில நாட்களாக நடைபெறும் தொடர்போராட்டங்கள் உண்மையிலேயே நான் கண்ட வெற்றிகரமான திருப்பங்கள்..தளராமல் தொடருவோம்.

என் இனிய நண்பர்களே இது எனது தனிப்பட்ட தாழ்மையான வேண்டுகோள்.. நடைபெறும் தொடர்போரட்டங்களிற்கு வரும் போது தயவு செய்து மதுபானத்தை தொடாதீர்கள்.நாம் எல்லோருமே கொதிநிலையில் உள்ளோம் எமது ஆதங்கங்களை நாம் பிறர்க்கு கூறும் போது நாம் தெளிவாகவும் உண்மையாகவும் உணர்வுடனும் இருக்கவேண்டும்.எம் நிலை சற்று தடுமாறினால் கூட மிகப்பெரிய பாதகமான சூழ்நிலையை எமக்கு தந்துவிட நம் எதிரி காத்துகிடக்கின்றது.

எம் அன்பார்ந்த இளையோரே உங்களின் ஆக்கங்களை செயற்படுத்தும் போது தயவு செய்து பங்குகொள்ளும் அனைத்து மக்களிற்கும் அதைப்பற்றி விளக்கங்களை எப்படி, என்ன, ஏன் எதுவரை இப்படி தெளிவாக கூடி ஆராய்ந்து முடிவெடுத்து நீங்களும் அதை நடைமுறைபடுத்துவதில் மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட்டால்தான் உங்களிற்கு பின்னால் நிற்கும் நாங்களும் பலமாகவும் உங்களின் அரனாகவும் நின்று எமது தார்மீக கடமைகளை சரிவர செய்யலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.
எந்த ஒரு நண்பரையோ அல்லது தனிப்பட்ட நபரையோ குறைபிடிப்பது குற்றம் கூறுவதோ எனது நோக்கமல்ல..எம்முன்னால் உள்ள சிறு தடங்கல்களை அப்புறப்படுத்தி எமது போராட்டங்களை வேகமாக முன்னெடுத்து செல்வதே எனது நோக்கம்.

இப்பதிவினை படிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் பணிவான ஒரு சிறு வேண்டுகோள். இதில் உள்ள கருத்துக்கள் நன்றாக இருந்தால் மற்றவர்களுக்கும் கூறுங்கோ.. தவறுகள் இருப்பின் தயவு செய்து எனக்கு சுட்டிக்காட்டுங்கள்.
சுவிஷில் இருந்து அட்சயா

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.