நெதர்லாந்தில் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டம்

நெதர்லாந்து நாடாளுமன்றமுன்றலில் ஏற்கனவே இருதாய்மார்கள் 14 நாட்களாக உண்ணாநிலைப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். நெதர். நாடாளுமன்றத்திலும் சிறீலங்காப்போர்பற்றிய காத்திரமான விவாதம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் ஐ.நா மன்றின் மூலம் சிறீலங்காவில் போர்நிறுத்தத்திற்கு உடனடியாக அழுத்தம் கொடுக்கப்படும் என்று முடிவுஅறிவிக்கப்பட்டதால் உண்ணாநிலைப்போராட்டம் 14 ஆவது நாளில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதுவரை சிறீலங்காஅரசு போரை நிறுத்தாமல், சர்வதேசசட்டங்களையும் மதியாமல் தொடர்ந்தும் தமிழர்களிற்கெதிராக தமிழினஅழிப்புப்போரை குறுகியநிலப்பான முல்லைத்தீவுமாவட்டத்தில் வாழும் மக்களிற்கெதிராக நடாத்திக்கொண்டிருக்கின்றது. அத்துடன் உணவையும் மருந்தையும் போராயுதமாகப் பயன்படுத்தி மக்களை பட்டினிபோட்டு கொன்றுகொண்டிருக்கின்றது.

எனவே,

உடன் போரை நிறுத்தவேண்டும்

வன்னிக்கு உணவு மருந்துகளை உடன் அனுப்பவேண்டும்

என்றமுக்கிய மனிதாபிமான கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநிலைப்போராட்டம் மீண்டும் நாளை ஞாயிறுமுதல் (03.05.2009) டென் காக்கிலுள்ள நாடாளுமன்றமுன்றலில் காலை 10 மணிமுதல் ஆரம்பிக்கப்படுகின்றது. இப்போராட்டத்திற்கு பலம் சேர்க்க அனைவரையும் இம்முன்றலில் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.