பரமேஸ்வரன் வழியில் 4 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாநிலை

london-hunger-strikeபிரித்தானிய அரசாங்கம் பரமேஸ்வரனுக்கு கொடுத்த உறுதி மொழி நிறைவேற முன் தமிழீழ தாயக்கத்தில் தமிழினம் அழிந்து விடுமோ என்ற பயத்தில் அந்த உறுதி மொழி விரைவில் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை தங்களுடைய முதன்மை கோரிக்கையாகவும் பரமேஸ்வரனின் 5 அம்ச கோரிக்கைக்கு ஆதரவளித்தும் 4 பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்றிரவு (01.05.09) 10 மணியில் இருந்து ஆரம்பித்துள்ளனர்.

பரமேஸ்வரன் உடன் உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்து சிவாவும் இதில் உள்ளடங்குவார். உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் “எங்கள் உண்ணாநிலைப் போராட்டத்தின் கோரிக்கையை ஆதரித்து பல ஆயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் சுழற்சி முறையில் நாடாளுமன்ற சதுக்கத்தில் கூடி தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு காலம் வரும் வரை போராட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார். மாணவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தை செய்திகள் வழியாக கேள்வியுற்ற மக்கள் அணி அணியாக நாடாளுமன்ற சதுக்கத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.