தமிழகத்தில் இன்னொரு இளைஞர் தீக்குளிப்பு

தமிழகத்தில் இன்று முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் கொளத்தூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மதுரையில் இன்னொரு இளைஞர் தீக்குளித்துள்ளார்.

பள்ளிப்பட்டு என்ற இடத்தைச் சேர்ந்த ரவி என்ற இளைஞரே ஈழத் தமிழ் மக்களுக்கு நீதியும் சமாதானமும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தீக் குளித்ததாக தெரியவருகின்றது. எனினும் இதுதொடர்பான மேலதிக தகவல்கள் எதனையும் அறிந்து கொள்ள முடியவில்லை.

இது இவ்வாறிருக்க, இன்று கொளத்தூரில் வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் இறுதி நிகழ்வுகள் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இலட்சக் கணக்கான மக்கள் மிகவும் எழுச்சியோடு பேரணியில் கலந்துகொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

தமிழீழ தேசியக் கொடியினால் பேழை மூடப்பட்ட நிலையில், கார்த்திகைப் பூக்களின் நடுவே பேளை வைக்கப்பட்டு பேரணியாக எடுத்துச் செல்லப்பட்டது. இதன்போது தமிழீழ தேசியத் தலைவரின் பிரமாண்டமான நிழற்படங்கள் பெருமளிவில் எடுத்துச் செல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் தமிழீத் தேசியத் தலைவரின் நிழற்படங்கள் மற்றும் தமிழீழ வரை படங்கள் போன்றவற்றை தாங்கிச் சென்றனர்.

அத்துடன், மக்கள் உணர்ச்சி பூர்வமாக காணப்பட்டனர். கொங்கிரஸ் கட்சிக்கும், மத்திய அரசுக்கும் எதிராக கடுமையான கோசங்களை அவர்கள் எழுப்பிச் சென்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.