மட்டக்களப்பில் தாக்குதல்; ஒரு படையினர் பலி – இருவர் காயம்

batticaloaநேற்று இரவு (02-05-2009) 10.20 மணியளவில் மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேசத்திலுள்ள வெம்பு பகுதியில் ரோந்து சென்ற சிறிலங்கா இராணுவத்தினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய  தாக்குதலில் ஒரு சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை அதாரம் காட்டி நெருடல் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.மேலதிக விபரங்கள் எதுவும் குறிப்பிடபடவில்லை.


மட்டக்களப்பில் இருந்து நெருடலுக்காக மீனகன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.