அம்பாறையில் உக்கிரமோதல். 09 படையினர் பலி, 04 போராளிகள் வீரச்சாவு

amparaiஅம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் புலிகளின் வரவை எதிர்பார்த்து பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்த சிறிலங்கா விசேட அதிரடிப் படையினருக்கும் புலிகளின் அணி ஒன்றிற்கும் இடையில் நேற்று (02-05-2009) மாலை 05.10 மணியளவில் நடைபெற்ற நேரடி உக்கிரமோதலில் 09ற்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்டதோடு, உயர் அதிகாரி ஒருவர் உட்பட 07ற்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் படுகாயமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.

பல மணிநேரம் நடைபெற்ற இத்தாக்குதலில் போது தமது தரப்பில் 04 போராளிகள் வீரச்சாவை தழுவிக்கொண்டதாகவும் புலிகள் அறிவித்துள்ளனர்.


மட்டக்களப்பில் இருந்து நெருடலுக்காக மீனகன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.