டென்மார்க்கில் றணாஸ், ஈக்காஸ்ற், மிடில்பாட் ஆகிய நகரங்களில் கவனயீர்ப்புப் போராட்டம்

dsc00921டென்மார்க்கில் தொடர்ந்து அதன் பெருநகரங்களில் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப் போராட்டமானது றணாஸ், ஈக்காஸ்ற், மிடில்பாட் போன்ற தமிழர்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் நடைபெற்றது. றணாஸ் நகரத்தில் வாழும் தமிழ்மக்கள் மைதானம் ஒன்றில் கூடாரம் அமைத்து ஆயிரத்திற்கும் அதிகமான டெனிஸ் மக்களுடன் இனிய சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இச் சந்திப்பின்போது அங்கு சமூகமளித்த டெனிஸ் மக்களுக்கு ஈழத்துஉணவு பரிமாறப்பட்டு கலந்துரையாடலுடன் எமது தமிழின அழிப்பின் கொடூரக்கொலைகள் சம்பந்தமான் வீடியோ படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சிறிலங்கா அரசின் திட்டமிட்ட தமிழின அழிப்புகளை டெனிஸ் மக்கள் விளங்கிக்கொள்ளும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் டெனிஸ் மொழியில் அச்சிட்டு வினியோகிக்கப்பட்டன.

மிடில்பாட்டில் 02.05.09 அன்று நடைபெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் 100 க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பங்கு பற்றி தமிழர் விழுமியங்களைப் பிரதிபலிக்கும் உடைகளை அணிந்திருந்தமை வித்தியாசமான ஒர் உணர்வை வெளிப்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈக்காஸ்ற் என்ற இடத்தில் கூடிய 200 க்கும் அதிகனமான தமிழ்மக்கள் தங்கள் போராட்டங்களை நகரசபை முன்றில் நடாத்திக் கொண்டிருந்தவேளை அந்நகரத்தின் மேயரும் (நகரபிதா), எதிர்க்கட்சித் தலைவரும் போராட்ட இடத்திற்குச் சமூகமளித்து அங்கு போராட்டம் நடத்திக்கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் மத்திய அரசிக்கு எங்கள் கோரிக்கையை முன்வைக்கத் தாங்கள் கடைமைப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.