ஏமாறுபவன் இருக்கும் வரை;ஏமாற்றுபவன் இருந்து கொண்டேதான் இருப்பான் – தமிழர்கள் இனியும் இவர்களிடம் ஏமாறலாமா?

erik_solheim2-copyவிடுதலைப்புலிகளால் இராணுவ வெற்றிகளைப் பெற்று போராட்டத்தைக் கொண்டு செல்ல முடியாது. இந்த உண்மையை அவர்கள் புரிந்து கொண்டு ஆயுதங்களை போட்டுவிட்டு அரசியல் ரீதியில் போராடி பேச்சுக்களின் மூலம் தீர்வைப் பெறுவது பற்றி யோசிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது என்று முன்னாள் நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் இந்தியாவில் வைத்து நேற்றுத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் சிறீலங்கா நிலவரம் தொடர்பாக ஐநா பொதுச்செயலர் மற்றும் இந்திய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு செய்தியாளர்களிடம் மேற்படி கருத்தை சொல்கைம் முன் வைத்துள்ளார். இதே கருத்தையே இணையத்தலைமை நாடுகளும் நோர்வேயும் ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வெளியிட்டிருந்தன.

இதற்கிடையே நேற்றைய தினம் சிறீலங்காவில் போர் கட்டுப்பாடின்றி தொடர்வது கவலை அளிப்பதாகவும் விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு யுத்தத்தை நிறுத்தி பேச்சு மேசைக்கு வர வேண்டும் என்று அறிக்கை விட்ட இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் கருத்தை இன்னொரு அறிக்கையூடு இந்திய வெளிவிவகார மந்திரியும் சோனியா காந்தியின் கையாளுமான பிரணாப் முகர்ஜி நிராகரித்திருப்பதுடன் சிறீலங்கா முன்னெடுக்கும் போரை இந்தியா வரவேற்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். யுத்தத்தை முன்னெடுத்துக்கும் அதேவேளை பொதுமக்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் முகர்ஜி.

யுத்தத்தை முன்னெடுக்கும் போது.. பாதிப்பு வராமல் யுத்தத்தை முன்னெடுக்கக் கூடிய.. வித்தை.. சோனியாவுக்கும்.. முகர்ஜிக்கும் தான் தெரிஞ்சிருக்குது..! என்னே கருசணை.. ஈழத்தமிழர்கள் மீது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.