நெதர்லாந்தில் உயர்தரவகுப்பு மாணவன் உண்ணாநிலைப்போராட்டம்

holland-hunderstrikerநெதர்லாந்து நாடாளுமன்ற முன்றலில் ஏற்கனவே இருதாய்மார்கள் 14 நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். நெதர்.  நாடாளுமன்றத்திலும் சிறீலங்காப்போர் பற்றிய காத்திரமான விவாதம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் ஐ.நா மன்றின் மூலம் சிறீலங்காவில் போர்நிறுத்தத்திற்கு உடனடியாக அழுத்தம் கொடுக்கப்படும் என்று முடிவு அறிவிக்கப்பட்டதால் உண்ணாநிலைப் போராட்டம் 21.04.2009 அன்று 14 ஆவது நாளில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதுவரை சிறீலங்காஅரசு போரை நிறுத்தாமல், சர்வதேசசட்டங்களையும் மதியாமல் தொடர்ந்தும் தமிழர்களிற்கெதிராக தமிழினஅழிப்புப்போரை குறுகியநிலப்பான முல்லைத்தீவுமாவட்டத்தில் வாழும் மக்களிற்கெதிராக நடாத்திக்கொண்டிருக்கின்றது. அத்துடன் உணவையும் மருந்தையும் போராயுதமாகப் பயன்படுத்தி மக்களை பட்டினிபோட்டு கொன்றுகொண்டிருக்கின்றது.

எனவே,

சிறீலங்காஅரசானது, உடன் போரை நிறுத்தவேண்டும்

வன்னியில் பட்டினிச்சாவிலுள்ள மக்களிற்கு உணவு மருந்துகளை உடன் அனுப்பவேண்டும்

என்றமுக்கிய மனிதாபிமான இருகோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலைப்போராட்டம் மீண்டும் இன்று ஞாயிறு மதியம் 3மணிமுதல் (03.05.2009) டென் காக்கிலுள்ள நாடாளுமன்றமுன்றலில் உயர்தரவகுப்பு கணனித்துறை மாணவனான கண்ணா ஜெயா (18வயது) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்துமக்களையும் இம்முன்றலில் ஒன்றுகூடி இம்மாணவனின் கோரிக்கைகளிற்கு வலுச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.