AIADMK அனைத்து இடங்களிலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம் – நோர்வேயிலிருந்து ஓர் தமிழ்மகன்

jayalalithaஎங்கள் அன்புக்கும் மதிப்பிற்குமுரிய தாய்க்கு,

புவியின் வடதுருவத்திலிருந்து தவிக்கும் ஒரு தமிழ்மகனின் தணியாததாகம்.காலங்கள் மாறும்போது நாம்கண்ட கனவெல்லாம் ஒருநாள் நனவாகும். இந்தியா என்றொரு தேசத்தின் தந்தையாக மகாத்மா காந்தியை இந்த உலகம் உள்ளவரை ஒவ்வொரு மனிதனும் தன்மனதில் வைத்துவணங்கும்போது தமிழீழம் என்ற ஒரு தேசத்தின் தாயாக தங்களை தமிழினம் மட்டுமல்ல தரணியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் போற்றிக்கொண்டாடுவான்.

தாயே உன் உள்ளமதை உணராமல் முன்பெல்லாம் நாம் வெறுப்பாக இருந்தோமே. அதையெல்லாம் மறந்து எங்கள்மேல் அன்பு கொள்ள புறப்பட்டுவிட்டீர்களே. இதுதான் உண்மையின் உருவம் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம் அம்மா. ஒரு தாய் தன்பிள்ளையை வருத்துவது அந்தப்பிள்ளையின் நன்மைக்காகவேயன்றி வேறொன்றுமில்லை என்பதை காலம்கடந்தபின் எங்களுக்கு உணர்த்தினீர்கள்.

தமிழினத் தலைவனென்று தனக்குத்தானே மகுடம் எடுத்து தமிழன் சரித்திரத்தையே தரித்திரமாக்கிவிட்ட மனிதர்களை தக்கசமயத்தில் இனங்காண வைத்ததாயே நீ எமக்கு வெறுந்தாயல்ல தெய்வத்தாயம்மா.

வெண்ணிற ஆடையிலே நீ எங்கிருந்தோ வந்தாய் என்று நாங்கள் ஏளனமாய் எள்ளிநகையாடினோமே. அத்தனையும் மறந்து அடிமைப்பெண்களின் விலங்கொடிக்கப் புறப்பட்ட ஆயிரத்தில் ஒரித்தியம்மா.

தேர்தலுக்காக ஆடும் நாடகமென்று சொல்லும் ஒருசில பச்சோந்திகளின் பசப்புவார்த்தகளை நாங்கள் இனிமேல் நம்பத்தயாரில்லை. எங்கள் வெளியுலகப் போராட்டத்தின் ஆணிவேராக அணைத்துக்கொள்ளும் தாயாக உங்களை நம்புகிறோம் அம்மா. நிச்சயம் எங்களை எங்கள் உடன்பிறப்புகளை நீங்கள்தானம்மா காப்பாற்றவேண்டும். நீங்களும் கைவிட்டால் எம்மினத்தை காப்பாற்ற நாங்கள் யாருமற்ற அனாதைகள் ஆகிவிடுவோம்.

தந்தை செல்வா ஒருதடவை சொன்னார் இனிமேல் தமிழரை அந்தக்கடவுள்தான்
காப்பாற்றவேண்டுமென்று. அந்தக்கடவுளும் எம்மைக்கைவிட்டுவிட்டார்.

அந்தக்கைவிட்ட கடவுளின் பெயரால் கைகூப்பி கேட்கிறோம்.
கைகொடு தாயே கைகொடு. அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு ஆசான் என்றால் தெய்வம் அத்தனையும் கொண்டது அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற் கழகத்தின் தலைவி.

உங்கள் உதவிக்கரத்திற்காய் ஏங்கித்தவிக்கும்
நோர்வேயிலிருந்து ஓர் தமிழ்மகன்
KAMLN Oslo

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.