கோத்தபாய ராஜபக்ஷ, சட்டமா அதிபர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக வித்தியாதரன் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

vithyatharan2009சுடர் ஒளி மற்றும் உதயன் ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டமா அதிபர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் தாம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாக தெரிவித்து, வித்தியாதரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, வித்தியாதரனின் அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் காலங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் அனுர சேனாநாயக்க, உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரி.பி. விஜேரட்ன, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர, காவற்துறை மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இன, மொழி மற்றும் அரசியல் காரணங்களைக் கருத்திற் கொண்டு அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்படக்கூடாத�
�ன மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய சூழ்நிலை ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுதல், கடத்தல்கள், அச்சுறுத்தல்கள் என பல்வேறு அடக்குமுறைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் குற்றச் செயல்களை மேற்கொள்வோர் இதுவரையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமை பெரும் வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையில் தாம் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பல தடவைகள் விசாரணைகளை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொழும்பில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களுடன் தமக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து முதலில் கடத்தப்பட்டு பின்னர், கைது என்ற பெயரில் விசாரணைகள் நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரான்ஸில் உள்ள தமது உறவினர் ஒருவரிடம் தாக்குதல் சம்பவம் குறித்து தொலைபேசியில் கலந்துரையாடியதனை அடிப்படையாகக் கொண்டு இந்த கைது இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் காவற்துறையினர் தம்மை தாக்கியதாக மனுவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.