பாதுகாப்பு வலயத்தினுள் விமானம் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை

sujatha-rajaramஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியரான சுஜன்தி ராஜாராம், மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் பட்டினிச்சாவைப் போக்க, விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமே வைத்தியர் சுஜன்தி ராஜாராம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வன்னி மக்களின் நலன் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை அற்ற போக்கினை கடைப்பிடிக்கும் நிலையில், அது குறித்து, அவர் எழுதியுள்ள வன்னியின் மருத்துவ நிலைமைகள் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை வீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல்களினால் பொது மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதுடன், அதனால் அவர்கள் உள ரீதியாகவும் பாதிப்படைவது குறித்தும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வன்னிக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கலை சிறிலங்கா அரசாங்கம் முற்றாக நிறுத்தியுள்ள நிலையில் அங்குள்ள பொதுமக்கள் கடும் உணவுப் பஞ்சத்தையும், பட்டினிச்சாவையும் எதிர்நோக்கியுள்ளனர் எனவும் கடந்த சில நாட்களில் 9 பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.