காங்., சின்னத்தில் தமிழர்களின் ரத்தம் இருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு ஒரு ஓட்டுக் கூட போடக்கூடாது: வைகோ

vaiko1””காங்., கட்சியை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்,” என, செஞ்சியில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் வைகோ பேசினார்.ஆரணி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்ரமணியை ஆதரித்து செஞ்சியில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது: கருணாநிதி, போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு இலங்கை சண்டையை பத்திரிகைகளில் செய்தி போடக்கூடாது என்று சர்வாதிகாரியை போல் மிரட்டுகிறார்.

ராஜபக்ஷே இலங்கையில், யுத்த செய்திகளைப் போடக்கூடாது என்று தடை செய்து விட்டார். கருணாநிதி ராஜபக்ஷேவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டாரா? 16ம் தேதி எல்லாம் தலைகீழாக மாறப்போகிறது.இலங்கை தீவில் 35 ஆயிரம் தமிழர்கள் புலிகள் பிடியில் இருந்து வெளியே வந்து விட்டதாக பத்திரிகைகளில் வந்த செய்தியில் எந்த உண்மையும் கிடையாது.அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய 48 மணி நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங் வீட்டு வாசலில் நின்று கொண்டு ராஜபக்ஷே, “போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை’ என்றார். இலங்கை தமிழர்களை பட்டினி போட்டு கொல்ல ராஜபக்ஷே அரசு முடிவு செய்துள்ளது.

ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைப்பேன் என்று ஜெ., சொன்னார். அது எப்படி முடியும் என்று கருணாநிதி கேட்கிறார். 70-71 ம் ஆண்டில் பாகிஸ்தானை எந்த அடிப்படையில் உடைத்து வங்க தேசத்தை உருவாக்கினீர்கள்? அதே அடிப்படையில் தான் பூர்வீக தமிழர்கள் வாழும் பகுதியை தனி ஈழமாக அமைக்க, அனைத்து தியாகத்தையும் செய்ய தயாராக அறிவித்திருக்கிறார்.காங்., சின்னத்தில் தமிழர்களின் ரத்தம் இருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்கு ஒரு ஓட்டுக் கூட போடக்கூடாது; டிபாசிட் இழக்க செய்ய வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.