கொழும்பு தேவாலாயத்தை சூறையாடிய புத்த பிக்குகள்

colombo-churdhஇலங்கையில் பல்வேறு கிருஸ்துவ தேவாலயங்கள் மீது புத்த பிக்குகள் பயங்கர தாக்குல் நடத்தியுள்ளனர். பாதிரியார் ஒருவரின் குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கொழும்பில் உள்ள 150 ஆண்டு பழமையான மெத்தோடிஸ்ட் சர்ச் மீது தாக்குதல் நடத்திய பிக்குகள் அதை சூறையாடினர். பின்னர் அங்கிருந்த பைபிள்கள், கம்ப்யூட்டர்கள், இசைக் கருவிகள், பாடல் புத்தகங்கள், தேவாலய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுவிட்டனர்.

பின்னர் அந்த தேவாலயத்தின் பாதிரியாரான பிரதீப் குமாரா என்பரை குடும்பத்தோடு ஊரை விட்டு வெளியாறாவிட்டால் கொலை செய்வோம் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதே போல மேலும் சில தேவாலயங்களும் தாக்கப்பட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.