தயாமாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் அகியோர் சரணடையவில்லை சிகிச்சை பெற்று வந்தவர்களை இராணுவம் கைதுசெய்துள்ளது

thayamaster1விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு பொறுப்பாளராக விளங்கிய தயாமாஸ்டர் இருதய அறுவை சிகிச்சை பெற்று உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இன் நிலையில் திடீர் தாக்குதல் மூலம் வைத்தியசாலையை சுற்றிவளைத்த இராணுவத்தினர், அவரை படுக்கையில் வைத்து கைதுசெய்துள்ளனர். ஒரு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நோயாளி என்று கூடப்பாராமல், இவரை கைதுசெய்து, போதிய மருத்துவ வசதிகள் எதுவும் வழங்காமல் அவரை தடுத்துவைத்துள்ளதாக அறியப்படுகிறது.

அத்துடன் அவர் தானாக வந்து சரணடைந்ததாக பரப்புரைகளை மேற்கொள்கிறது இலங்கை இராணுவம். களத்தில் இன்னமும் போராடிக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் மன உறுதியை உடைக்கும் நடவடிக்கையாகவே இவ்வாறு இராணுவம் பொய்யான தகவல்களை வெளியிட்டுவருவதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.