புலிகளின் முன் நாள் உறுப்பினர் மாத்தையாவின் மனைவியும் பிள்ளைகளும் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில்

mathayaபுதுமத்தளான் பகுதியில் இருந்து சில தினங்களுக்கு முன்னர் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு சென்ற மக்களில், விடுதலைப் புலிகளின் முன் நாள் முக்கிய பிரமுகரான மாத்தையாவின் மனைவியும் பிள்ளைகளும் இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரனை நடத்தப்படுவதாக அறியப்படுகிறது.

புலிகள் இயக்கத்தில் தன்னை 1978 ஆம் ஆண்டு இணைத்துக்கொண்ட மாத்தையா அப்போது புலிகளால் அமைக்கப்பட்ட (PFLT) கட்சியின் தலைவராகவும் திகழ்ந்தார். தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது நன்பராக இருந்த காலகட்டத்தில் அவர் இந்திய உளவுப்பிரிவுடன் சேர்ந்து பிரபாகரனை கொல்ல சதித்திட்டம் தீட்டியது பொட்டம்மானால் கண்டறியப்பட்டது.

அவர் 1990ம் ஆண்டு கொல்லப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அன்று முதல் இன்று வரை அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்குமான முழு குடும்பச் செலவை விடுதலைப் புலிகளே உதவி வந்ததாக அவர் மனைவி இராணுவத்திடம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை பற்றி மேலதிக செய்திகள் எதனையும் கூற மறுத்துவிட்ட அவர் மனைவி, இராணுவம் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை தம்மிடம் கேட்பதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இவர் எத் தகவல்களையும் கூற மறுத்துவருவதாக அறியப்படுகிறது.

அதிர்வு

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.