சிறீலங்கா விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அதிகாரபூர்வமற்ற முறையில் ஆராயப்படும் – ரஷ்யா

russia_flag_outசிறீலங்கா விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அதிகாரபூர்வமற்ற முறையில் ஆராயப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் ரஷ்யாவின் தூதுரவர் தூதுவர் விற்றாலி சுர்கின் தெரிவித்திருக்கின்றார்.

மே மாதத்திற்கு திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளருக்கு விளக்கமளிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சிறீலங்கா விவகாரம் ஆராம்படுவததை ரஷ்யா எதிர்க்கிறதா? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஷயத் தூதுவர் விற்றாலி சுர்கின் ” பாதுகாப்புச் சபையில் சிறீலங்கா விவகாரம் தொடர்பில்  அதிகாரபூர்வமற்ற முறையில் ஆராயப்படுவதை ரஷ்யா எதிர்க்வில்லை. குறித்த விவாதத்தில் சிறீலங்காத் தூதுவரும் கலந்துகொள்வார்.

சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமானப் பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த மனிதாபிமான நிலைமைகளைச் சமாளிப்பதற்கு சிறீலங்கா அரசாங்கத்திற்கு அனைத்துலச சமூகம் உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என அவர் மேலும் அங்கு தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.