இலங்கை ஜனாதிபதி, கோத்தபாய, பசில், இராணுவத்தளபதி ஆகியோருக்கு எதிராக சர்வதேச போர் குற்ற விசாரணைகள் நடத்தப்படவேண்டும்: புருஸ் பெய்ன்

ltte_atrocities_20061201_gotabhaya_rajapaksa_09இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவரின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மற்றும் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக போர் குற்றச்சாட்டு விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என அமெரிக்காவின் உள்ள தமிழர் இனப்படுகொலைகளுக்கு எதிரான அமைப்பின் ஆலோசகர் புருஸ் பெய்ன் கோரியுள்ளார்.

அமெரிக்காவின் உள்ள தமிழர் இனப்படுகொலைகளுக்கு எதிரான அமைப்பு, இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச போர் குற்றச்சாட்டு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரியுள்ளது.

இது தொடர்பில், அமைப்பின் ஆலோசகர் புருஸ் பெய்ன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சிரேஸ்ட சட்டவியலாளர் லூயிஸ் மொனேரோ ஒகாம்போவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கையில் படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் சம்பந்தப்படாத தமிழர்கள் படையினரால் கொலை செய்யப்படுகிறார்கள்.

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவரின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மற்றும் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராகவே இந்த விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என புருஸ் பெய்ன் கோரியுள்ளார்.

இந்தநிலையில் ரோம் உடன்படிக்கையின் 5-8 வரையிலான பந்திகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என பெய்ன் கோரியுள்ளார்.

ஏற்கனவே புருஸ் பெய்ன், இது தொடர்பில் முழுமை ஆவணங்களை தயாரித்து அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.