அம்பாறையில் கண்ணிவெடித் தாக்குதல்: 2 அதிரடிப்படையினர் பலி

20090114185121srilanka_203அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள உடும்பன்குளம் படை முகாமில் இருந்து சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சிறப்பு அதிரடிப்படையினரின் வருகையினை எதிர்பார்த்து காத்திருந்த விடுதலைப் புலிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:55 நிமிடமளவில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தினர்.இதில் சம்பவ இடத்திலேயே இரு அதிரடிப்படையினரும் கொல்லப்பட்டனர் என விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைப் பணியகம் தெரிவித்திருக்கின்றது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.