யேர்மனியில் மூன்றாவது நாளாகத் தொடரும் பட்டினிப் போராட்டம்

_dsc8876யேர்மனி டுசில்டோவ் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்று வரும் பட்டினிப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை  மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

உடனடிப் போர் நிறுத்தம், வன்னி மக்களுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பட்டினிப் போரைத் தொடுத்து வருகின்றனர்.

இவ் இளைஞர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பட்டினிப்போராட்டம் நடைபெறும் திடலில் ஒன்று கூடித் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.