இத்தாலி ஜெனேவா நகரில் மாபெரும் தீப்பந்தகவனயீர்ப்புப் பேரணி

dscn210804-05-2009 திங்கள் கிழமை அன்று இத்தாலி மேற்பிராந்திய தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மாபெரும் தீப்பந்த கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை ஜெனேவா மாநகரில் நடாத்தியது. ஜெனேவா பிரதான தொடரூந்து  நிலையத்தில் ;(Stazione  di Brignole) இருந்து மாலை 6.30 க்கு ஆரம்பமான மேற்படி பேரணி நகரின் முக்கியமான வீதிகளினுடாக சென்று இரவு 9 மணியளவில் Piazza De ferrari யைச் சென்றடைந்தது.அதைத் தொடர்ந்து அங்குள்ள தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுப்பும் இடம்பெற்றது.

இப்பேரணியில் இத்தாலியின் பல பாகங்களிலிருந்தும் வந்த 800ற்கு மேற்பட்ட எம் தமிழ் உறவுகள் கலந்துகொண்டு தாயகத்தில் எம் மக்கள் படும் அவலத்தையும் தாயக இன்றைய நிலையையும் இத்தாலிய மக்களின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது 1000 ற்கு மேற்பட்ட இத்தாலிய மொழியிலுள்ள துண்டுப்பிரசுரங்கள் அம்மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.