யேர்மனியில் 4 வது நாளாகத் தொடரும் பட்டினிப்போராட்டம்.

_dsc8908யேர்மனி டுசில்டோவ் பாராளுமன்றம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட பட்டினிப்போராட்டம் 4வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது யுத்தத்தை உடன் நிறுத்த வேண்டும் பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்தே இப் பட்டினி போராட்டத்தை கிரி,ராகுல் ஆகிய இரு இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று சீராற்ற காலநிலையாக இருந்த போதும் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் என பாராளுமன்றத்திற்கு முன் உள்ள திடலில் ஒன்று கூடி போராட்டத்தை நடத்திவரும் இளைஞர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

இவ்விரு இளைஞர்களின் உடல்நிலை மருத்துவரால் இன்று பரிசோதிக்கப்பட்டது. கடந்த 4 வாரங்களுக்கு மேலாக யேர்மனியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.