தமிழ்நாட்டில் சொனியாவின் பிரச்சாரம் ஒத்தி வைப்பு

தமிழகத்திற்கு சோனியா காந்தி வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில் சொனியாவின் பிரச்சாரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை காரணமாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும், தமிழக மக்களின் கடும் எதிர்ப்பே இந்த ஒத்திவைப்புக்கு காரணம் என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு இன்னும் ஐந்து நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் இந்த ஒத்திவைப்பு தி.மு.க., கொங்கிரஸ் கூட்டணியிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மேற்கொள்வதாக இருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து, சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்வதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. சென்னை தீவுத் திடலில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் சோனியா பங்கேற்பதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்ற வந்தன.

இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். இதனால், சோனியாவின் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், சோனியாவின் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துளளார். மறு திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.