மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியப் பொறுப்பதிகாரி சிறீலங்காவுக்கு வரத் தடை

human-rights-watch_0மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி ஹெனா நெஸ்டட் சிறீலங்காவுக்கு எதிர்காலத்தில் வருவது தடை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்திற்கான பொறுப்பதிகாரி ஹெனா நெஸ்டட் சிறீலங்காவுக்கான சுற்றுலா உள்நுழையும் அனுமதியைப் பெற்று, அனைத்துலக தன்னார்வ நிறுவனங்களின் உதவியுடன் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை விடயங்கள் தொடர்பில் வவுனியாவரை சென்று பிழையான தகவல்களை சேகரித்து அனைத்துலக சமூகத்திற்கு வழங்கியதாக இவர் மீது சிறீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

ரஷ்ய மனித உரிமை ஆர்வலரான ஹெனா நெஸ்டட் சிறீலங்காவுக்குள் உள்நுழைவதற்காக தன்னை ஒரு சட்டதரணி என அறிமுகம் செய்து உள்நுழையும் அனுமதியைப் பெற்றுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் உறுதி செய்துள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவரது சிறீலங்காப் பயணத்தின் போது சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை விடயங்கள் குறித்து 45 பக்கங்கள் கொண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிக்கப்பட்டதாக இவர் மீது சிறீலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.