நெதர்லாந்தில் உயர்தரவகுப்பு மாணவனும் 2பிள்ளைகளின் தாயாரும் 4ஆவதுநாளாக உறுதியாகத் தொடரும் உண்ணாநிலைப்போராட்டம்

holland1சிறீலங்காஅரசானது, தமிழினஅழிப்புப்போரை உடன் போரை நிறுத்தவேண்டும்

பட்டினிச்சாவு நிகழ்கின்ற வன்னி மக்களிற்கு உடனடியாக உணவு மருந்துகளை வான்மார்க்கமாக அனுப்பவேண்டும்

என்றமுக்கிய மனிதாபிமான இருகோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலைப்போராட்டமானது நெதர்லாந்து நாடாளுமன்றமுன்றலில்   இன்று புதன் (06.05.2009) 4ஆவது நாளாக தொடருகின்றது. உயர்தரவகுப்பு கணனித்துறை மாணவனான கண்ணா ஜெயா (18வயது), 2பிள்ளைகளின் தாயாரான கல்பனா கந்தசாமி (37 வயது) ஆகிய இருவரும் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்..   மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை தங்கள் இப்போராட்டம் தொடரும் என மனுவொன்றை  கடந்த திங்கள் (04.05.09) வெளிநாட்டமைச்சிடம் இவ்விருவரும் கையளித்துவிட்டு தங்கள் போராட்டத்தை தொடருகின்றனர். அனைத்துமக்களையும் இம்முன்றலில் ஒன்றுகூடி இவர்களின் கோரிக்கைகளிற்கு வலுச்சேர்க்குமாறு இவ்விருவரும் கேட்டுக்கொள்கின்றார்கள்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.