புலம்பெயர்வாழ் தமிழ் மக்களே! விழிப்பாயிருங்கள்!

vilippu-nerudalஇந்திய இலங்கை அரசுகளின் புலனாய்வு அமைப்புக்கள் அல்லது துணைப்படைகளுடன் இணைந்து வெளிநாடுகளில் செயற்படும் சிலதமிழர்கள் தமிழ்மக்களின் அரசியல்விருப்பத்திற்கு எதிராக சிலநாசகாரத்திட்டங்களை செயற்படுத்த முயற்சிசெய்வதாக செய்திகள் வந்துள்ளன.

பேரினவாத சிங்களஅரசின் தமிழினப்படுகொலைகளிற்கெதிராக புலம்பெயர்ந்த நாடுகளில் கவனயீர்ப்புபோராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதனால், தாங்கள் நினைத்த தமிழினஅழிப்பு இராணுவத்திட்டத்தினை தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக்கொண்டு தீவிரமாக முன்னெடுக்கமுடியாமல் இவ்விரு அரசுகளும் திணருகின்றன. இதனை முறியடிக்க இந்திய இலங்கை அரசுகள் தங்களிற்கு விசுவாசமான மேற்குறிப்பிட்ட சிலஆசாமிகளைக்கொண்டு தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஅமைப்புக்களை புதிதாக ஆரம்பித்து தமிழ்மக்களை முட்டாளாக்க முயற்சிசெய்கின்றனர். தாங்கள் வாழும் நாடுகளிலுள்ள அரசபிரதிநிதிகளுடன் சில சந்திப்புக்களையும் இரகசியமாக செய்கின்றனர்.

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்களை நரபலிவேட்டையாடும் இந்திய சிங்கள அரசுகளுடன் இணைந்து தம் சொந்த மக்களிற்கெதிராக செயற்பட புதிதாக முளைக்கின்ற இந்த துரோகக் கும்பல்களை அடையாளம் கண்டு இவர்களிற்கு தகுந்த பாடம் புகட்ட விழிப்பாயிருக்குமாறு புலம்பெயர்வாழ் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.