புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 1000 ற்கு மேற்பட்ட படையினர் பலி! பெருமளவு படையப் பொருட்கள் மீட்பு!

29_31_02_09_01புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மற்றும் மன்னங்கண்டல் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினரரின் ஊடறுப்பு அதிரடித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான படையப் பொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து மேலும் தெரிய வருகையில்:

கடந்த பெப்ரவரி 1ம் நாள் புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்கு நோக்குடன் கேப்பாபுலவு மற்றும் மன்னாங்கண்டல் பகுதில் பெருமளவு படையினரும், பெருந்தொகையான படையப்பொருட்களுகம் குவிக்க்பபட்டிருந்தன.

முதலாம் நாள் தொடக்கும் 3ம் நாள் வரை இடம்பெற்ற புலிகளின் ஊடறுப்பு தாக்குதல் மற்றும் கரும்புலித் தாக்குதல்களில் 1000 ஆயிரத்திற்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்

81 மில்லி மீற்றர்  மோட்டார்கள் – பல
120 மில்லி மீற்றர் மோட்டார்கள்  – பல
120 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் – 2000
81 மில்லி மீற்றர் மோட்டார் எறிகணைகள் – 8000
ஏ.கே துப்பாக்கிகள் – நூற்றுக் கணக்கில்
ஏ.கே துப்பாக்கி ரவைகள் – ஒரு மில்லியனுக்கு மேல்
ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் – பல
ஆர்.பி.ஜி உந்துகணைகள் – பல
ஆர்.பி.ஜி புரொப்ளர்கள் – பல
எல்.எம்.ஜி துப்பாக்கிகள் – பல

என இன்னும் பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை செவ்வாய்கிழமை கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டதாகவும் புதன்கிழமை வெளிவந்த ஈழநாதம் பத்திரிகை தெரிவித்திருந்தது. அதில் கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளின் தேசியத் தலைவருடனான படங்களும் பிரசுரமாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேநேரம் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் படையினருக்கான வழங்கல்களை மேற்கொண்ட 20 வாகனங்களை தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.