சோனியாகாந்தியின் தமிழக வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

இந்திய நாடளுமன்ற தேர்தல் – 2009 க்கான பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் சோனியாவை எதிர்த்து தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (06.05.2009) காலை த.வி.ஆ.இ 11.00 மணிக்கு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொத்துக்குண்டுகள் , பாஸ்பரஸ் குண்டுகள் , இரசாயண குண்டுகள் என பேரவலம் அன்றாடம் தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசு இவ்வினப்படுகொலையை இந்தியாவின் சந்தை நலனுக்காகவும், தேசியஇன ஒடுக்குமுறையை கட்டி பாதுகாக்கவும், இலங்கையில் வேறெந்த நாடும் கால்பதித்து விடக்கூடாது என்று போரை நடத்திவருகிறது.

இந்திய அரசின் அமைச்சர் பதவிக்காக தேர்தல் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான கூட்டணிக்கு பிரச்சாரம் செய்ய காங்கிரசின் சோனியாகாந்தி வாக்கு சேகரிக்க தமிழம் 06.05.09 அன்று வருகிறார்.

ஈழத்தில் ஒருபுறம் தமிழனப்படுகொலையை நடத்திக் கொண்டு அந்த இரத்த கறையோடு தமிழகத்தில் ஓட்டு பொறுக்க வரும் கொலைகாரி சோனியாவை திரும்பிப்போ என தமிழீழ விடுதலை ஆதரவு இயக்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 6.05.2009 (புதன்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டம் தோழர்.மார்க்சு தலைமையில் பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடியுடன் குவிந்து தனது கண்டனத்தை தெரிவித்தனர். புரட்சிகர இளைஞர் முன்னணி,புரட்சிகர தொழிலாளர் முன்னணி , ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி,புரட்சிகர மாணவர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தோழர்.மார்க்சு இலங்கையில் சிங்கள அரசின் மூலம் தனது வல்லாதிக்கத்தை நிறுவிக் கொள்ளவேண்டும். என்பதற்காக தமிழினத்தின் உரிமையை, உயிர்களையும் பலியிடுகிறது. சோனியா-மன்மோகன்சிங் காங்கிரஸ் அரசு அதற்கு பக்கபலமாக கருணாநிதியும் செயல்படுகிறார்.

இலங்கை ‘இறையாண்மைக்கு” தமிழீழம் பலியிடப்படுகிறது, இந்தியாவின் ‘இறையாண்மைக்கு ” தமிழகம் பலியிடப்படுகிறது. என்றும் ஒன்றரைக் கோடி மக்கள் கொண்ட சிங்கள அரசு இறையாண்மை உள்ள சுதந்திர அரசாக உள்ளதால் அதற்கு இந்திய ஏகாதிபத்திய அரசு உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் உதவி செய்கின்றது. சிங்கள அரசோ மூர்க்கதனமான இனப்படுகொலையை செய்து வருகிறது.

7 கோடி மக்கள் கொண்ட தமிழர்கள் நம்மால் ஈழத்தமிழர்களையோ, தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதையோ நம்மால் தடுக்க இயலாத கையறுநிலையில் நாம் உள்ளோம். இதற்கு தமிழகத்திற்கு இறையாண்மை ஏதும் இல்லாததால்தான் நாம் அடிமைத்தனத்தில் உள்ளோம். அடிமையின் குரல் அம்பலம் ஏறாது. இந்திய ‘இறையாண்மைக்கு’ தமிழகத்தின் சொந்த இறையாண்மையைப் பலி கொடுத்துவிட்டு அடிமையாய் குரல் எழுப்பும் தமிழ் நாட்டின் குரல் டெல்லி ஏகாதிபத்தியத்தின் காதுகளில் ஏறாது.

தெற்காசிய மண்டலத்தில் பேட்டை ரவுடியாக உள்ள இந்தியா தமிழர்களுக்கு எதிரான நிலை கொண்டிருப்பதால் உலக நாடுகள் எல்லாம் அதை மீறி ஆதரவு நிலை எடுக்க தயங்குகின்றன. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை மனிதகுலத்தின் அறம்சார் கொள்கை ஈழத்தமிழர் பிரச்சினையில் உலக நாடுகள் இந்த அறம்சார் கொள்கையைப் பொருட்படுத்தவில்லை.

இதற்கெல்லாம் காரணம், தெற்காசிய மண்டலத்தில் பேட்டை ரவுடியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள இந்தியாவே. சிங்கள நட்புக்காக தமிழர்களின் உயிர்களையும் உரிமைகளையும் பலியிடலாம் என்கிற இந்தியாவின் கொள்கையே ! இந்தியாவின் இந்தக் கொள்கைக்கு முடிவுகட்ட வேண்டும். தமிழகம் அடிமை நிலையிலிருந்து விடுபட்டு தனது கடமையினைச் செய்யவேண்டும் தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகத்தை ஆதரவு பின்புலமாக்க வேண்டும்.

இந்தக் கடமையை நிறைவேற்ற தமிழக மக்கள் உறுதி ஏற்க வேண்டும். இது ஒன்றுதான் தெற்காசிய மண்டலத்தில் இந்தியாவின் தமிழர் விரோதக் கொள்கை முடிவுக்கு வரவும் உலக நாடுகள் நியாயத்தின் பக்கம் விழி திறக்கவும் வழிவகுக்கும் என பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ‘கொலைகாரி சோனியாவே திரும்பி போ ! திரும்பி போ !” ‘தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தாத சோனியாவே உனக்கு தேர்தல் ஒரு கேடா” என முழக்கமிட்டனர்.

முன்னாதாக கொலைகாரி சோனியாவை திரும்பிப்போ! ஏன கண்டன சுவரொட்டிகள் பரப்புரை செய்த திருவொற்றியூர் பகுதி தோழர்கள் 3 பேரை காங்கிரஸ் ரவுடிகள் கொலைவெறியுடன் தாக்கியதொடு பொலிஸின் துணையுடன் பொய் வழக்கும் பொட்டனர். இவ் ஒடுக்குமுறையை எதிர்த்து பு.தொ.மு தோழர்கள் போராடி வருகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.