ஜெயலலிதாவை வணங்குகிறேன் : ‌சீமா‌ன்

seemanதனி ஈழம்தான் தீர்வு என்று கூறிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வணங்குகிறேன் எ‌ன்று இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் கூ‌றினா‌ர்.

திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு சா‌ர்‌பி‌ல் திரைப்பட இய‌க்குன‌ர் பாரதிராஜா தலைமையில் ஈரோ‌ட்டி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த பொது‌க் கூ‌ட்ட‌த்த‌ி‌ல் இய‌க்குன‌ர் சீமான் பேசியதாவது :

தந்தை பெரியாருக்கு காங்கிரசை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது.அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளிவந்து உள்ளேன்.இன்னும் 10 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன்.

இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகிறது சிங்கள ராணுவம்.அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம், தலாய்லாமா நாட்டை பிரித்து கேட்டால் ஆதரவு அளிக்கிறது.தமிழர்கள் நாட்டை கேட்டால் ஒழிக்க நினைக்கிறது.அப்போது சீனாவுக்கு இறையாண்மை, ஒருமைப்பாடு இல்லையா?.

யாரும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் தனி ஈழம்தான் தீர்வு என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார்.அவரை வணங்குகிறேன்.

நான் இப்போது இந்தியா உள்பட உலக நாடுகளை கேட்பது எல்லாம், நீங்கள் விடுதலைப்புலிகளை அழிக்க ஆயுதமோ எந்த உதவி வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் ‌‌விடுதலை‌ப்பு‌லிக‌ள் ‌மீதான தடையை மட்டும் நீக்கிவிடுங்கள்.

தனி ஈழம் மலர பிரபாகரன் நடவடிக்கை எடுப்பார். இந்தியாவில் மட்டும் விடுதலைப்புலிகளுக்கான தடை நீக்கப்பட்டு, எங்களை இலங்கைக்கு செல்ல அனுமதித்தால் 15 லட்சம் பேர் இலங்கை செல்ல தயாராக இருக்கிறார்கள். 10 நாட்களில் தமிழ் ஈழம் மலரும் எ‌ன்று சீமான் பேசினார்.

Thuvinthiran’s blog

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.