அன்புள்ள ஜெயலலிதா அம்மாவுக்கு..

jayalalitha1உலக தமிழ் மக்கள் சார்பாக இந்த அடியேனின் வணக்கங்கள்,

அம்மா உலகத்தமிழினமே உன்னிப்பாக எதிர்பார்த்து நிற்பது உங்கள் ஒரே வார்த்தையைத்தான் வரண்டு போன பயிர்களுக்கு வார்த்த நீர் போல் எங்கள் இதயங்களுக்கு  புத்துயிர் ஊட்டியிருக்கிறது. இருந்தும் ஆட்சிக்கு முன் கூறிய அர்தமற்ற பேச்சோ என்று சில நேரங்களில் எண்ணத்தோன்றுகிறது. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை உங்கள் அரசியல் எதிரி போட்ட நாடகங்களும் அடித்த குத்துகரணங்களாலும் எங்கள் மனங்கள் எவரையும் இலகுவில் நம்பத்தாமதிக்கிறது. எண்ணற்ற ஏமாற்றங்களால் நிறைந்து போய்கிடக்கிறது எம் மனங்கள். இருந்தும் அந்த பட்டியலில் நீங்கள் இணைய மாட்டிர்கள் என்ற பூரண நம்பிக்கை எமக்கு உண்டு. ஏனெனில் தமிழ் இனத்துக்கே தர்மம் புரிந்த தலைவன் வழியில் வந்தவர் நீங்கள் அந்த வரலாற்று தவறை நீங்கள் இழைக்க மாட்டிர்கள் என்ற பரிபூரண நம்பிக்கை எமக்கு உண்டு.

அம்மா நீங்கள் நன்றாக அறிவீர்கள் தமிழ் தேசம் உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ எந்த தவறையும் இழைக்க இல்லை. இனி இழைக்கப்போறதுமில்லை. உலகத்தமிழன் என்று தன்னனத்தானே அழைத்துக்கொண்டு தமிழ் இனத்துக்கே துரோகம் புரியும் தலைவர்கள் முன்னாடி துணிந்து இந்த வர்த்தையை கூறியிருக்கிறீர்கள்.

அப்போதே நீங்கள் உலத்தமிழ் தலைவியாகிவிட்டீர்கள். அம்மா உங்கள் வாயில் இருந்து உதிர்த்த வார்த்தையிலிருந்து இருண்டு போன எங்கள் இனத்தின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு சூரியன் உதிப்பதாய் உணர்கின்றோம். அம்மா நீங்கள் கூறிய வார்த்தையை  நடைமுறை படுத்தினால் உங்கள் அரசியல் வாழ்கையில் புரிந்த வரலாற்று சாதனையாக இருக்கும். அதுமட்டுமல்லாது இனிவரும் அத்தனை தமிழ் சந்ததியும் உங்களை போற்றி பூசிக்கும்.

கூறியதை நடைமுறைபடுத்தும் போது ஆயிரம் அரசியல் சிக்கல்களை எதிர்நோக்குவீர்கள் என நாம் அறிவோம். அதையெல்லாம் வெல்வதற்கான திட்டங்கள் இல்லாமல் கூறியிருக்க மாட்டீர்கள் என்பதையும் நாம்  அறிவோம். இருந்தும் அப்படி ஒரு சிக்கல் உங்களுக்கு ஏற்பட்டால் உலகத்தமிழினமே உங்கள் பின்னால் நிக்குமென உறிதிபட கூறுகிறோம். இறுதி மூச்சு உள்ளவனுக்கு உயிர் மூச்சு கொடுத்தது போல்
உங்கள் வார்த்தை உள்ளது. வெல்வது நீங்கள் உறுதி சொன்னதை நிறைவேற்றுவீர்கள் என்ற ஏக்கத்தோடு தமிழ் இனம் அதில் அடியேனும் ஒருவன்.

நன்றி
பிரான்சிலிருந்து சீலன்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.