சிறிலங்காவில் தொடரும் மனித உரிமை மீறல்கள் ஆழ்ந்த கவலையளிக்கின்றது – டென்மார்க்கின் வெளிநாட்டமைச்சர்

Per Stig Møller

Per Stig Møller

டென்மார்க் வெளிநாட்டமைச்சர் Per Stig Møller அவர்கள் கருத்து தெரிவிக்கையில் சிறிலங்காவில் போர்ச் சூழலிலுள்ள பொது மக்களின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளது என்பதை கவனத்தில் கொண்டு பொதுமக்களின் இன்னல்களை நிறுத்துவதற்கும் அளவுக்கு அதிகமான மனித உரிமை மீறல்களையும் நிறுத்துவதற்கான சர்வதேச அழுத்தத்தினை அதிகரிப்பதற்காக வெளிநாட்டு அமைச்சின் மனித உரிமைகள் விவகார ராஜதந்திரியை அனுப்பிவைத்துள்ளார்.

இவர் போரில் சிக்கியுள்ள பொது மக்களை பாதுகாப்பதற்கான சிறிலங்காவின் பாரிய பொறுப்பினை அந்நாட்டு பிரதி நிதிகளுடன் கலந்துரையாடுவார் என்பதையும் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.