யேர்மனியில் 4வது நாளாகத் தொடரும் இளைஞர்களின் பட்டினிப் போராட்டம்.

germany-hunger-06052009உடனடியுத்த நிறுத்தம்,யுத்தம் நடைபெறும் பகுதியில் உள்ள மக்களுக்கு மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து டுசில்டோவ் மாநிலப் பாராளுமன்றத்திற்கு முன்பாக கிரி,ராகுல் ஆகியோரால் தொடங்கப்பட்ட பட்டினிப்போராட்டம் நேற்று புதன்கிழமை 4வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவ்விரு இளைஞர்களும் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட போதிலும் தமது லட்சியத்தில் உறுதியாக உள்ளனர்.

மாலை 7மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு தாயகத்தில் பலியான மக்களுக்காக மெழுவர்த்தி ஏந்தி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

நாளை முதல் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் சூழற்சி முறையில் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.