வன்னியில் 48 மணி நேரத்திற்குள் 162 பேர் படுகொலை 251 பேர் படுகாயம் – தவிட்டை உண்ணும் மக்கள்

20060908003003201வன்னியில் கடந்த 48 மணி நேரத்திற்குள் தமிழர்கள் 162 பேரின் உயிர்களை சிறீலங்கா படையினர் பறித்து இனவழிப்பை தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.இன்றும் (வியாழக்கிழமை) சிறீலங்கா படையினர் கடுமையான தாக்குதலை தொடுத்து பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களை கடுமையான அவலத்திற்குள் தள்ளியுள்ளனர். தொடர்ச்சியாகப் பதுங்ககழிகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது அல்லல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே நேற்றும் நேற்று முன்னாளும் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட வான் தாக்குதல் பல்குழல் எறிகணைஇ வெள்ளைப் பொஸ்பரஸ் இரசாயனக் கணைஇ நச்சுவாயுத் தாக்குதல் துப்பாக்கிச்சூடு என்பவற்றில் அப்பாவிப் பொதுமக்கள் 162 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.