கனடாவில் இருந்து வெளிவரும் Tamil Mirror மாதாந்த ஆங்கில பத்திரிகை ஜெயலலிதா அவர்களை பாராட்டி வெளியிட்ட அறிக்கை

tamilmirror-bannerமாண்பு மிகு டாக்டர் செல்வி ஜெயலலிதா அவர்கட்கு…

பொதுச் செயளாளர்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்,
வேத நிலையம்
போயஸ் கார்டன்
சென்னை 600 086, இந்தியா.

அம்மா அவர்கட்கு:

எமது ஈழத்தமிழர்கள் வரலாற்றில் முன் எப்போழுதும் இல்லாத சோதனைக் காலத்தினுடாக சென்று கொண்டுடிருக்கிறார்கள்.

அவர்கள் படும் சொல்லாணத் துயரம் பற்றி நாம் உங்களுக்கு விளக்கிச் சொல்ல அவசியம் இல்லை. தொலைக்காட்சிகள், வானொலிகள், மின்கணினி , பத்திரிகை , YouTube மேலும் சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் மூலமாக தமிழ் ஈழத்தில் இனப்படுகொலை நடப்பதை அறிந்து வைத்திருப்பீர்கள்.

இன்று ஈழத் தமிழர்கள் அனாதைகளாக சர்வதேச சமூகத்தினாலும் ஏன் இந்தியாவினாலும் கைவிடப்பட்டவர்களாக நிற்கிறார்கள். இந்நிலையில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தனித் தமிழீழமே ஓரே தீர்வு என மிகவும் ஆணித்தரமாக அறுதியிட்டுக் கூறியுள்ளீர்கள். இத்தருணத்தில் உங்கள் ஆறுதல் மொழிகள் எமக்கு மன ஆறுதலையும், தைரியத்தையும் அளித்து வருகின்றன.

நீங்கள் புரட்சித் தலைவி என்பதனையும், சொல்வதைச் செய்யும் தலைவி என்பதனையும் உலகத் தமிழினம் நன்கு அறியும்.

இவ்வளவு காலமும் உலகத்தமிழினத்தின் தலைவர் என்று சொல்லி வந்த கலைஞர் கருணாநிதியினால் தமிழ் ஈழத்தில் நடக்கும் இன அழிப்பை நிறுத்த முடியாமற் போய்விட்டது துரதிர்ஷ்டமே.

நீங்கள் உங்கள் சகல சக்திகளையும் ஓன்று திரட்டி ஈழத்தமிழருக்கு விடிவு காண வேண்டும் என மனமுருகிக் கேட்டுக் கொள்கிறோம்.

ஈழத்தமிழருக்கு “தகப்பனாய்” நின்று குரல்கொடுத்த புரட்சித்தலைவர் MGR விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்தை புரட்சித் தலைவியான நீங்கள் “அம்மா” வாக பொறுப்பேற்று குரல்கொடுத்து நிரப்ப வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

ஏதிர்வரும் தேர்தல்களில் நீங்கள் அமோக வெற்றி பெறவேண்டும் எனவும் ஈழத்தமிழருக்கு உங்கள் உதவி தொடரவேண்டும் எனவும்; எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Tamil Mirror மாதப் பத்திரிகையானது கனடாவின் 3 லட்சம் தமிழருக்காக வெளிவரும் ஓரே ஓரு ஆங்கில பத்திரிகையாகும்.

நன்றி

சாள்ஸ் தேவசகாயம்
நிர்வாக ஆசிரியர்

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.