போரைநிறுத்து! உணவை அனுப்பு! நெதர்லாந்தில் 5வது நாளாக உண்ணாநிலைப் போராட்டம்

dsc04846சிறீலங்காஅரசானது, தமிழினஅழிப்புப்போரை உடன்  நிறுத்தவேண்டும்

வன்னி மக்களிற்கு உணவு மருந்துகளை உடனடியாக அனுப்பவேண்டும்

என்றமுக்கிய மனிதாபிமான இருகோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலைப்போராட்டமானது நெதர்லாந்து நாடாளுமன்றமுன்றலில்   இன்று வியாழன் (07.05.2009) 5ஆவது நாளாகத் தொடருகின்றது.

உயர்தரவகுப்பு கணனித்துறை மாணவனான கண்ணா ஜெயா (18வயது), 2பிள்ளைகளின் தாயாரான கல்பனா கந்தசாமி (37 வயது) ஆகிய இருவரும் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்..   மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை தங்கள் இப்போராட்டம் தொடரும் என மனுவொன்றை  கடந்த திங்கள் (04.05.09) வெளிநாட்டமைச்சிடம் இவ்விருவரும் கையளித்துவிட்டு தங்கள் போராட்டத்தை தொடருகின்றனர்.

உடல்கள் சிதறி பட்டினிச்சாவுகள் வன்னியில் தொடருகின்ற இவ்வேளையில் அதிகமான மக்களை ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.