நெதர்லாந்து சிறீலங்காத்தூதரகம் தமிழர்களைப் பாவித்து எதிர்ப்பிரச்சாரம்

uthayanநெதர்லாந்தில் வெளிவரும் “போல்க்ஸ் கிரான்ற்” எனும் முக்கிய தினசரிப்பத்திரிகையில் 29.04.2009 அன்றைய பதிப்பில் “ நெதர்லாந்துத் தமிழர்கள் புலிகளிற்குப் பயம்” என்ற தலையங்கத்தில் உதயகுமார் சிவநாதன், ஜெயம் என்ற இரு தமிழர்கள் கூறியதாக செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இவர்களில் உதயகுமார் பற்றி சுவாரசியமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இவர் டென்மார்க்கில் உதயன் என்ற பெயரில் வாழ்ந்துள்ளார். பின் 2000 ஆம் ஆண்டில் நெதர்லாந்திற்கு வந்து வேற்றினப் பெண்ணை மணமுடித்து வாழ்கின்றார். இங்கு குமார் என அழைக்கப்படுகின்றார். நெதர்லாந்தில் டென்காக் நகரத்திலுள்ள சிறீலங்காத் தூதரகத்துடன் நெருக்கமான உறவைக்கொண்டுள்ள இவர் பெப்.4 இல் சுதந்திரத்தினங்களிலும் பங்குபற்றி சிங்கள பேரினவாதச் சிந்தனையில் ஊறிப்போனவராவார். அத்துடன் 2005 ஆம் ஆண்டில் ரொத்தர்டாம் நகரில் தமிழர்களை வைத்து உதைபந்தாட்டப் போட்டியையும் நடாத்தியுள்ளார். இதில் சிறப்பு என்னவெனில் சிறீலங்காத் தூதரகத்தின் அதிகாரி ஒருவரே சிறப்புவிருந்தினராக பங்குபற்றியதாகும்.

மேலும், 2006 இல் சிறீலங்காவிலிருந்து சிங்கள தேசிய துடுப்பாட்டக்கழகத்தை அழைத்து இங்குள்ள தமிழர்களுடன் விளையாட்டுப் போட்டியையும் அம்சர்டாம் நகரில் நடாத்துவதற்கு மிகவும் பிரயத்தனம் செய்துள்ளார். ஆனால், தமிழ்த்தேசிய உணர்வுள்ள விளையாட்டு வீரர்களால் இதற்கு கடும் எதிர்ப்பு வரவே இதனை கைவிட்டுள்ளார்.

சிங்கள அரசானது எமது மக்களை உலகால் தடைசெய்யப்பட்ட பேராயுதங்களைப் பாவித்தும் பட்டினிபோட்டும் பல்லாயிரக்கணக்கில் கொன்றுவரும் இவ்வேளையில், எவ்வித இன உணர்வோ மனிதாபிமானமோ இல்லாமல் தமிழ் சிங்கள பேதமின்றி தான் நடுநிலையாளராக வாழ்ந்துவருவதாக அனைவரிடமும் கூறிக்கொள்ளும் இவர் ஒரு பொதுநிறுவனத்தையும் பதிவுசெய்து சட்டத்திலுள்ள ஓட்டையைப் பயன்படுத்தி காசடிக்கும் வித்தையையும் தெரிந்து வைத்துள்ளார். எனவே, தமிழ்மக்கள் இவர்பற்றி விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அப்பத்திரிகையின் இணையத்தளச்செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது:

http://www.volkskrant.nl/binnenland/article1190850.ece/Tamils_in_Nederland_vrezen_Tijgers

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.