06-05-2009 டென்மார்க்கில் மாபெரும் அவலப் பேரணி

06052009-kbh-demon-2இன்றுகாலை டென்மார்க் பாராளுமன்றம் முன்பாக மாபெரும் அவலப் பேரணியொன்று டென்மார்க் வாழ் தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

300 க்கும் அதிகமான தமிழ்மக்கள் தூர நகரங்களிலும் இருந்து வந்து பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தோடர்ந்து இதேமாதிரியான பேரணியொன்று நாளை டென்மார்க்கின் ஐ.நா அலுவலகம் முன்பாக நடைபெறவிருப்பதால் தூர நகரங்களில் இருந்து வருகை தந்த தமிழ்மக்கள் கொப்பன்கேகனில் ஓர் மண்டபத்தில் தங்கி நிற்பதற்கான வசதிகள் செய்யபட்டுள்ளது.

போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வெளியில்வந்த வெளிநாட்டமைச்சர் அங்கு கூடி நின்ற தமிழ்மக்கள் மத்தியில் வந்து திருப்தியளிக்கும் பல விடயங்களைத் தமிழ்மக்களுடன் கலந்துரையாடினார். டென்மார்க்கின் மனித உரிமைகள் சார்ந்த மன்னிப்புச் சபையினர் இருவர் இன்று உடனடியாகக் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விடயங்களையும், உடனடிப் போர்நிறுத்தம், மனிதஅவலம், பட்டினிச்சாவு, சுகாதார மருத்துவ வசதிகள் போன்றவற்றை தமிழ்மக்களின் கோரிக்கைகளாக அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு திடமான அழுத்தத்தைக் கொடுக்கவும் டென்மார்க் அரசு முன்வந்துள்ளதாகவும் தெரியப்படுத்தினார்.

நாளை நடைபெறவுள்ள அவசரகாலக் கவனயீர்ப்புப் போராட்டமானது ஐக்கிய நாடுகள் சபையின் முன் திடலில் மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்து டென்மார்வாழ் தமிழ்மக்களை இப்போராட்டத்தில் பங்குபற்றி பற்றியெரியும் ஈழத்தில் உள்ள தமிழ் உறவுகளைக் காப்பாற்ற முன்வரவேண்டும் என்று ஒழுங்கமைப்பாளர்கள் அழைக்கின்றனர்.

இப்போராட்டமானது ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தின் நிர்வாகத்தில் இயங்கும் உலக உணவுத்திட்ட, சுகாதார அமைப்பாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இம் மைதானம் போராட்டத்திற்காக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

ஓன்றுபட்டால் உண்டுவாழ்வு, ஒற்றுமையே பலம்!

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.